Tuesday, 17 August 2021

இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் 2021

 

உலகமே கோரணி நச்சு காரணத்தால் போராடி கொண்டிருக்கையில், ஆசிரியர்கள் அரை பணி இல்லாமல் இத்தருணத்தில் முழுப் பணியாக நேரம் காலம் பாராமல்  மாணவர்களுக்கு இணையம் மூலம் போதனை நடத்துகிறார்கள். அதிலும் பல போராட்டங்கள் … அந்தப் போராட்டங்களிடையே தேசிய வகை ரிவர்சைட்  தோட்டத் தமிழ்ப்பள்ளி, தலைமையாசிரியர் திரு.ந.ராமசாமி PBB தலைமைத்துவத்தில்  கீழ் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பலவிதமான போட்டிகள் நடத்தினர். பள்ளியின் பாடக்குழு மூலம் மினி பரிசோதனை, நீர்ப்புட்டி இசை, பாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டி, கவிதைக் கூறுவது( mendeklamasi pantun), கைவினைப் பொருள் உருவாக்குதல் இன்னும் பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்தோடு போட்டிகளில் கலந்து கொண்டு , அதற்கேற்ற  வீட்டிலிருந்து  பெற்றோர்களும் தன் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளித்து உறுதுணையாக இருந்தனர்.  போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் மின் சான்றுகளும் வழங்கப்பட்டன. புலனம் வழியாகவும் பள்ளியின் முகநூல் மூலமாகவும் மாணவர்களை கெளரவிக்கப்பட்டது. இவ்வாறு நடவடிக்கையினால் மாணவர்கள் மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிப்பாகவும் கட்டொழுங்கு மேன்பாடாக இருக்கும். இவை யாவுமே மாணவர்களின் தனி திறமைகளைக் கண்டறிந்து மேலும் அவர்களை செம்மைப்படுத்தி உயர்ந்த நிலைக்கு உருவாக்குவதே ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரின் நோக்கமாகும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறமை உண்டு. ஆசிரியர்கள் அத்திறமையைக் கண்டறிந்து அதற்கேற்ற பாதையை அவனுக்கு வழிவகுக்க வேண்டும். இதுவே ஆசிரியர்களின் கடமையாகும். ஆசிரியருடன்  பெற்றோரும்  ஒன்றினைந்து செயல்பட வேண்டும். இதைதான் அரசாங்கமும் மாணவர்களின் உருவாக்கம் ( kemenjadian murid) எனக் கல்வியில் வலியுறுத்தப்படுகிறது. இந்நோக்கத்தை நிறைவேற்ற பள்ளியின் தலைமையாசிரியரோடு பள்ளி நிருவாகம், ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் இவர்களோடு கைக்கோர்த்துப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும்  பள்ளி வாரியம் (LPS)  உறுதுணையாக இருக்கிறார்கள்.

நல்லதோர் வீணை செய்தே – அதை

நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ?

சொல்லடி, சிவசக்தி!- எனைச்

சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி,சிவசக்தி- நிலச்சுமையென வாழ்ந்திட

புரிகுவையோ? ( நல்லோதோர்)

 

எனும் பாரதி பாடலுக்கு ஏற்ப  இந்த  சர்வதேச கோரணி நச்சு காலக்கட்டத்தில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கி இந்த மண்ணுக்கும், மொழிக்கும், சமுதாயத்திற்கும் பயனுற வாழ்வோம்.

ஆக்கம் ; ஆசிரியை அன்பழகி. 2021



 

No comments:

Post a Comment

International Fun Walk 3.0

  International Fun Walk 5KM -3.0, 14.01.2023 - Stadium Kuala Selangor . Thank to co-curricular unit.